புலம்பெயர்ந்து தொழில் செய்யும் ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை செயற்படுத்துவதற்கு அவசியமான சட்ட வரைபை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்றுமுன்தினம் (01) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்வனுமதி கிடைத்துள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை தொடர்பில் ஆலோசிக்கவென அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவொன் அமைச்சரவை நியமித்தது. அக்குழுவின் சிபார்சுகளின் அடிப்படையில் இவ்வோய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய புலம்பெயர்ந்த ஊழியர்களுக்கான உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை செயற்படுத்துவதற்கும், அதற்கு தேவையான சட்ட வரைபை தயாரிப்பதற்கு ஏதுவான வகையில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கும் நீதியமைச்சர் கௌரவ கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வேலைத்தளம்