விளம்பரங்களையும்-ஆட்கடத்தல்காரர்களின் வார்த்தைகளையும் நம்பாதீர்! ஆஸி.

அவுஸ்திரேலியாவில் அகதி அந்தஸ்த்து வழங்கப்படும் என்று தெரிவித்து வெளியிடப்படுகின்ற விளம்பரங்களையோ அல்லது ஆட்கடத்தலில் ஈடுபடுகின்றவர்களின் வார்த்தைகளையோ நம்ப வேண்டாம் என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் அறிவுறுத்தல் விடுத்துள்;ளது

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரேஸ் ஹட்சன் Bryce Hutchesson இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார் என ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

படகுமூலம் அவுஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு அகதி அந்தஸ்த்தைப் பெற்றுக் கொள்ள தற்போது வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சில சமூக ஊடகங்களின் வாயிலாக செய்தி பரப்பப்படுகிறது.

ஆனால் அவுஸ்திரேலிய எல்லையானது சட்டவிரோத குடியேறிகளுக்கு மூடியே இருக்கிறது என்று அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான வாக்குறுதிகளை அல்லது போலியான விளம்பரங்களை நம்பி, தங்களது உயிரைப் பணயம் வைத்து படகு பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவ்வாறு படகுகள்மூலம் அவுஸ்திரேலியா செல்கின்றவர்கள் உடனடியாக திருப்பி அனுப்பப்படுவர் என்றும், முன்னதாக பல படகுகள் அவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435