புலம்பெயர் தொழிலாருக்கான ஓய்வூதிய நடவடிக்கைகள் 3 மாதங்களில் ஆரம்பம்

வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எதிர்வரும் 3 மாதங்களில் ஆரம்பிக்க முடியும் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துகோரள தெரிவித்தார்.

இரண்டு வருட ஒப்பந்தத்திற்கு 50,000 ரூபா பங்களிப்பு செய்வதனூடாக இந்த ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

கடந்த 29ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிபிஸி செய்தியாளர் கேட்ட கேள்வியொன்று பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், வீட்டுப்பணிப்பெண்களாக பெண்களை அனுப்புவதை நிறுத்தவுள்ளதாக நான் ஒரு போதும் கூறியதில்லை. 2020 ஆம் ஆண்டுக்கு பின்னர் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுவர் என்றே தான் கூறியதாகவும் இந்த ஆண்டு பெண்கள் வெளிநாடு செல்வது 10 வீதத்தால் குறைந்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள உயர்ஸ்தானிகராலயங்களில் உள்ள அதிகாரிகளை விமர்ச்சித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் காணொளிகள் தொடர்பில் வினவியபோது, சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பல விடயங்கள் உண்மைத்தன்மையற்றவை என அமைச்சர் தெரிவித்தார்.

அண்மையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் பெண் தொடர்பான விபரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானதையடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் குறித்த பெண்ணுடன் உயர்ஸ்தானிகராலயத்தின் தொழில் அதிகாரியும் அவருடன் இருப்பதை அறிய முடிந்தது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் என்ன வகையான பிரச்சினைக்கு முகம்கொடுக்கும் போதும் உடனடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தை தொடர்புகொள்ளுமாறு அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.

நன்றி – பிபிஸி

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435