எதிர்வரும் 2020ம் ஆண்டில் ஹோட்டல் துறையில் 1,50 000 தொழில்வாய்ப்புக்களை உருவாக்கப்படும் என்று இலங்கை சுற்றுலா, ஹோட்டல் முகாமைத்துவ தலைவர் சுனில் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சங்கிரிலா, ஹவாய் உள்ளிட்ட புதிய நட்சத்திர ஹோட்டல் திறக்கப்படுவதால் இத்தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சர்வதேச தரத்திலான ஹோட்டல் பாடசாலைகள் மேலதிகமாக அமைக்கப்பட்டு உயரிய தரத்திலான சான்றிதழ்கள் வழங்கப்படுவது அவசியம் என்றும் ஹோட்டல் துறைக்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.