புலம்பெயர் தொழிலாளர்கள் விடயத்தில் GMOAவின் கேள்விகள்

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நாட்டுக்கு மீள அழைத்து வரும்போது சுகாதார அதிகாரிகள் சரியான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) கூறுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு பல கட்டம் கட்டமாக நாட்டுக்கு அழைத்துவரப்பட வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசு வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்ஸா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டுக்கு அழைத்துவரப்படும் புலம்பெயர் தொழிலாளர்கள் முதல் நாளிலேயே பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்களா? பின்னர் 14 நாட்களுக்குள் மீண்டும் சோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தல் நிறைவடைந்த பின்னர் வீடு திரும்புவதற்கு முன் சோதனை செய்யப்படுவார்களா? என்பது சந்தேகத்திற்குரியது என தெரிவித்துள்ளார்.

நாடுதிரும்பி 4-5 நாட்களுகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டால், ஏனையவர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, அரசாங்கம் உரிய முறையில் பி.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435