வௌிநாட்டுக்கு தொழில் நிமித்தம் சென்று நாடு திருமப எதிர்பார்த்திருக்கும் இலங்கையர்களை மீள அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 தொற்று பிரச்சினையினால் குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இத்திட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளராக செயற்படும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் முகாம்களில் இடவசதிகள் தற்போது குறைவடைந்துள்ளன. கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்துடன் தொடர்பு வைத்திருந்த நபர்களின் குடும்ப அங்கத்தவர்களும் தற்போது தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதனால் வௌிநாடுகளில் இருந்து இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள் உட்பட பல நாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் நாட்டுக்கு திரும்ப எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.