சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற விண்ணப்பிப்பவர்கள் அதனுடன் மனநலத்தை உறுதி செய்யும் சான்றிதழையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசியசபை தெரிவித்துள்ளது.
தற்போது போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தினால் வழங்கப்படும் உடல் ஆரோக்கியம் தொடர்பான சான்றிதல் சாரதி அனுமதிப்பத்திரம் பெற போதுமாக தற்போது உளநலம் தொடர்பான சான்றிதழும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அதற்கு தீர்வாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்புக்கான தேசியசபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பான அமைச்சரவை அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விரையில் துறைசார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா அனுமதிக்கான பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்த பின்னர் உளநல சான்றிதழ் இல்லாமல் சாரதி சான்றிதழ் வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.