புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பதிவுக்கட்டணம் குறைப்பு

வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக செல்லும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் என்பன குறைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

புதிய அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட வரி மறுசீரமைப்பு காரணமாக இந்த கட்டண குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, 17 ஆயிரத்து 837 ரூபாவாக அறவிடப்பட்ட பதிவு கட்டணம் 16 ஆயிரத்து 416 ரூபாயாக வரி திருத்ததிற்கு அமைய குறைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் 3 ஆயிரத்து 755 ரூபாவாக அறவிடப்பட்ட பதிவு புதுப்பித்தல் கட்டணம் 3 ஆயிரத்து 456 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தம் கடந்த முதலாம் திகதி முதல் அமுலாக்கப்படுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435