புலம்பெயர்ந்து தொழில் செய்யும் இலங்கையர்கள் வௌிநாடுகளில் இருந்தவாறே உள்நாட்டு தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை வழங்குவதற்கான நடவடிக்கையில் சமூக அபிவிருத்தி சேவைகள் நிறுவனம் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாக அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் எண்ட்ரூ சாமுவேல் தெரிவித்தார் என்று தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக உணர்திறன் குறித்த செயலமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், புலம்பெயர்ந்து வௌிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் உள்நாட்டு தேர்தல்களில் வாக்களிப்பதற்கான உரிமையை பாதுகாக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். தபால்மூல வாக்களிப்பு முறை, தூதரகங்கள் அல்லது தூதரக அலுவலகங்களை வாக்களிப்புக்கு பயன்படுத்துதல், இலத்திரனியல் வாக்களிப்பு, மூலோபாய இடங்களில் வாக்களிப்பு வசதியை ஏற்படுத்துவதனூடாக பதிலாள் வாக்களித்தல் மற்றும் ப்ரொக்ஸி (proxy voting) வாக்களிப்பு என ஐந்து முறையை நாம் பரிந்துரைத்துள்ளோம்.
இவ்விடயம் தொடர்பில் இந்தளவுக்கு நாம் பேசுவதற்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு அளித்த பங்களிப்புதான் காரணம். புலம்பெயர் பணியாற்றும் சுமார் 1.5 தொடக்கம் 1.9 மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணத்தினால் எமக்கு வருடாந்தம் 7 பில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைக்கிறது. அவர்களில் 90 வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்றனர்.
அவர்கள் வௌிநாடுகளில் இருப்பதனால் தேர்தல் காலங்களில் வாக்களிப்பும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைப்பதில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தூதரகம் அல்லது தூதரக அலுவலகங்களில் வாக்களிக்க அனுமதிப்பது ஒரு உழைப்பு செயல்முறை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தி புலம்பெயர் தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர், பெண்கள், புலம்பெயர்வு, பொருளாதாரம், ஆட்சி மற்றும் புலம்பெயர்வு, புலம்பெயர்வு மற்றும் அபிவிருத்தி என பல விடயங்களை ஆராய்ந்து நாம் நாம் அறிக்கையொன்று வௌியிட்டோம். சில வேட்பாளர்கள் எமது அதிகாரிகளை சந்தித்தனர். சிலர் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமது அறிக்கையை இணைப்பதற்கு ஒத்துழைக்கவில்லை, ஆனால் குறித்த விடயம் குறித்து ஆழமாக ஆராய தவறிவிட்டது.
அவர்கள் அரசியல் அறிக்கைகள் மற்றும் ஊடகங்களில் பேசுவதற்காக அவர்கள் தங்கள் அறிக்கைகளுக்கான சுட்டிகளுக்காக எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள், ”என்றும் எண்ட்ரூ சாமுவேல் மேலும் கூறினார்.
மூலம் – டெய்லி எப்டி/ வேலைத்தளம்