புலம்பெயர் தொழிலாளர் தொடர்பில் தொடர்ந்தும் கவனத்தில்

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் என்பன தொடர்பில் வௌிவிவகார அமைச்சின் தூதரக காரியாலயத்துடன் தொடர்ச்சியான பணியாற்றி வருவதாக ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், புலம்பெயர் தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் நேற்று (24) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வௌிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன விரிவாக விளக்கினார்.

நாட்டுக்கு திரும்பி வருவது தொடர்பில் தூதரகத்திற்கு குறைந்த எண்ணிக்கையானவர்களே அறிவித்துள்ளனர். சுமார் 13 இலட்சத்திற்கும் அதிகமான புலம்பெயர் தொழிலாளர் வௌிநாடுகளில் பணியாற்றினாலும் அவர்களில் 52, 401 பேர் மட்டுமே தாய்நாடு திரும்பும் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். அவர்களில் சுமார் பத்தாயிரம் பேர் வரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். 117 நாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு வர எதிர்பார்த்துள்ளனர். 38 நாடுகளில் இருந்து 9588 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் 10 நாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை நேற்று ஆரம்பமானது. அதற்கமைய, எதிர்வரும் ஜூலை மாதம் 7ம் திகதி தொடக்கம் 10 விமான சேவைகளினூடாக அவர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

மேலும் இதற்கு வௌிநாடுகளில் இருந்து இலங்கை துறைமுகத்திற்கு வந்து வௌிநாடுகளுக்கு செல்வதற்கு கப்பல்களில் மாறி ஏறுவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அவ்வனுமதி நிறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு பிற நாடுகளில் இருந்து இலங்கை வரும் பலருக்கு கொவிட் 19 தொற்று இருந்தமையே இதற்கு காரணமாகும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

 

மூலம் – அரசாங்க தகவல் திணைக்களம்

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435