காலை நேரங்களில் ஏற்படும் பனி மூட்டம் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் பணியாற்றும் சாரதிகளில் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு காலநிலை அவதான நிலையம் கோரியுள்ளது.
நேற்று (05) தொடக்கம் டுபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய நகரங்களை அண்மித்த பகுதிகளில் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த நகரங்களில் வெப்பநிலை 12 செல்சியாக குறைவடைந்துள்ளதுடன், இந்நிலை இவ்வாரம் முழுவதும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமையினால் அதிகாலையில் வாகனமோட்டும் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலை காரணமாக நேற்றும் இன்றும் வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. டுபாயில் உள்ள உலகின் உயரமான கோபுரடதன பர்ஜ் கலீபா உட்பட ஏனைய கோபுரங்களின் மேற்பகுதி முற்றாக பனியினால் மூடிய நிலையில் உள்ள புகைப்படங்களை டுபாய் ஆளுநர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வேலைத்தளம்/ காலீஜ் டைம்ஸ்