புலம்பெயர் தொழிலுக்கு ஊழியர்களை இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பங்களில் சட்ட திட்டங்கள் மற்றும் தொழில் நெறிமுறைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவது என சர்வதேச ஆட்சேர்ப்பு விதிமுறைகள் குறித்த உலகளாவிய மாநாட்டில் (Global Conference on the Regulations of International Recruitment) தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பு (IOM) இனால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த மாநாடு இம்மாதம் 6ம் 7ம் திகதிகளில் கனடாவின் மொன்றியல் நகரில் நடைபெற்றது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை வேலைநாட்டு வேலைவாய்ப்புப் பணியக பொது முகாமையாளர் (சட்டம்) சட்டத்தரணி முதுகுமாரண கலந்துகொண்டதுடன் சுமார் 30 நாடுகளின் நூறு பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
சட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் தொழில் நெறிமுளைகள் உட்பட 3 பிரதான விடயங்கள் தொடர்பில் இம்மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன் இடைத்தரகர்களை சட்டரீதியாக அறிந்துக்கொள்ளல், பதிவு செய்தல் மற்றும் தொழிலுக்காக ஊழியர்களை இணைக்கும் போது அவர்களிடமிருந்து கடடணம் அறவிடாமல் தொழில் வழங்குநர்களிடமிருந்து கட்டணத்தை அறவிடுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பில் இலங்கை அரசு மற்றும் பணியகம் ஆற்றும் சேவைகள் குறித்தும் இம்மாநாட்டில் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்க தகவல் திணைக்களம்/ வேலைத்தளம்