பெண்களின் தொழிற்சங்க உரிமைக்கான முதலாவது முயற்சி

“இரவு நேர கடமையில் ஈடுபடும் பெண்களுக்கான உரிமைகளை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பத்தாயிரம் கையெழுத்துகள் பெற்ற பிரதியை தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்னவிடம் நேற்று (03) கையளிக்கப்பட்டது.

”தொழில் செய்யும் அவள்’ அமைப்பினால் இக்கையெழுத்துப் பிரதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ‘தொழில் செய்யும் அவள்’ பெண்கள் தொழிற்சங்க அமைப்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்திருந்த சிநேகபூர்வமான தௌிவுபடுத்தல் நிகழ்வில் பணியிடங்களில் இரவு பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல் உட்பட பெண்களின் உரிமைகளை முன்னிறுத்தி பத்தாயிரம் கையெழுத்துக்கள் சேகரிக்கும் நிகழ்வு ஆரம்பமானது. இக்கையெழுத்துப் பிரதியில் பத்தாயிரம் கையெழுத்துக்கள் எதிர்பார்க்கப்பட்டாலும் தற்போது பதினைந்தாயிரம் கையெழுத்துகள் இடப்பட்டுள்ளமை விசேட விடயமாகும்.

அமைச்சருடனான கலந்துரையாடலின் போது பணியாற்றும் இடங்களில் பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள், அரச சேவையில் போன்னே தனியார்துறையில் பணியாற்றும் பெண்களுக்கும் மகப்பேற்றுக்கான சலுகைகளை பெற்றுக்கொடுத்தல், இரவு பணியின் போது பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் இரவு பணியின் ​போது பெண்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினைகள் என்பன தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

குறித்த கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதான இதன்போது அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பதற்கு நிறுவன ரீதியாக விசாரணைகளை மேற்கொள்ளவும் தொழில் வழங்குநர்கள் தமது ஊழியர்களுடைய உரிமைகளைப் போன்றே சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்துவதன் அவசியம் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

women rights 2

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435