பெண்களுக்கு எதிரான மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் – பெண்கள் ஆய்வு மையம்

பெண்களுக்கு எதிரான மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அவர்கள் சமத்துவ அடிப்படையி;ல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என பெண்கள் ஆய்வு மையத்தின் அதிகாரியான லீலாங்கி வனசுந்தர தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வேலைத்தளம்| இணையத்துக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தமது கருத்துக்களை எம்முடன் சுருக்கமாக பகிர்ந்துகொண்டார். சமூக கட்டமைப்பில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அவர் இவ்வாறு விபரிக்கிறார். வன்முறைகள், தொழிலின்மை, வறுமை முதலவான பல்வேறு பிரச்சினைகளை பெண்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பொலிஸாரின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் கடந்த ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

பெண்கள் பணிபுரியும் இடங்கள், பொதுப் போக்குவரத்துகள் முதலான இடங்களில் பாலியல் வன்முறைகள், பாலியல் தொந்தரவுகள் என்ற அடிப்படையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறுகின்றன. வீட்டு வன்முறைகளும் பெண்களுக்கு எதிராக இடம்பெறுகின்றன. இந்த நிலையில், பெரும்பாலான சம்பவங்கள் அறிக்கையிடப்படுவதில்லை.

ஆண்களைவிட அதிகமான பெண்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கின்றனர். எனினும், பெண்களின் வேலையற்ற நிலைமையானது ஆண்களைவிட இரு மடங்காக உள்ளது. பெண்களில் குறிப்பிட்டளவானவர்களே உயர் பதவிகளில் உள்ளனர். ஆண்களைவிட அதிகமான பெண்கள் விவசாயத்துறையில் பணியாற்றுகின்றனர். எனினும், அவர்கள் எந்த விதமான கொடுப்பனவுகளும் இன்றியே பணியாற்றுகின்றனர். கொடுப்பனவுகள் அற்ற குடும்ப உறுப்பினர்களாக உள்ளனர்.

பெரும்பாலான பெண்கள் முறைசாரா துறைகளில் தொழில்புரிகின்றனர். அவர்களின் வருமானம் நியாயமற்;றது. அவர்கள் கடன் உதவிகளைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். அத்துடன், தமது உற்பத்திகளை சந்தைப்படுத்துவதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.
முறைசார் தொழில்துறையாக ஆடைத் தொழிற்சாலை மற்றும் பெருந்தோட்டத்துறை முதலான துறைகளில் அவர்கள் பணியாற்றுகின்றனர்.
பெரும்பாலான குறைந்த வருமானத்தைக் கொண்ட பெண்கள் தமது வறுமை நிலைமை காரணமாக வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்கின்றனர். அவர்கள் குறைந்த திறன் கொண்வர்களாகவும், குறைந்த வருமானத்துக்கும் அங்கு பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.

அவர்களின் வருமானம் நாட்டுக்கு உதவியாக உள்ளது. தமது பிள்ளைகளின் கல்விக்கும், வீட்டுத் தேவைக்கும், வீட்டை வடிவமைத்துக் கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், அவர்கள் துன்புறுத்தலகளுக்கு, அதிக வேலை, உடல் மற்றும் உளவியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவர்கள் சிறியளவான சேமிப்பைக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பெண்ணின் பிள்ளைகள், அவரின் கணவர் மற்றும் குடும்பத்தவர்களால் பிணைக்கப்பட்டுள்ளபோதும், அவர்கள் நிராகரிக்கப்படலாம். வழமையாக, அவர்களின் குடும்பத்தில் உள்ள மூத்த பெண் பாடசாலைக்கு செல்ல மாட்டார்.

ஆண்களைவிட அதிகமான பெண்கள் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படுகின்றபோதும், அரச மற்றும் தனியார் துறைகளில் குறைந்தளவான பெண்களே உயர் மட்டத்தில் உள்ளனர். ஆண்களைவிட அதிகமான பெண்கள் தொழிலற்றவர்களாகவும், குறைந்த வருமானத்தைப் பெறுபவர்களாகவும் உள்ளனர்.
சுமார் 24வீதமான குடும்பங்கள் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்டுள்ளன. அந்தக் குடும்பங்கள் வறுமை நிலையைக் கொண்டதாக உள்ளன. முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்கள், வாழ்வியல் நடவடிக்கைகளிலும், பாதுகாப்பிலும் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர்.
இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் என மாற்றத்திற்கான பரிந்துரையாக அவர் கூறுகிறார்.

நாடாளுமன்றத்தில் குறைந்தளவான பெண்களே பிரதிநிதித்துவப் படுத்துகின்றனர் (2015இல் 4.9மூ) அத்துடன், உள்ளுராட்சி மன்றங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்தளவிலேயே உள்ளது. பெரும்பாலான பெண்கள் அரசியலுக்கு வரவேண்டும். எனினும், அவர்களுக்கு வேட்புமனு வழங்கப்படுவதில்லை. அவர்கள் பெரும் வன்முறைகளை எதி;ர்நோக்குவதுடன், குடும்பத்தின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பதில்லை. இவ்வாறான நிலையில், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையில் மாற்றம் ஏற்பட வேண்டும் அவர்கள் சமத்துவ அடிப்படையி;ல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். என பெண்கள் ஆய்வு மையத்தின் அதிகாரியான லீலாங்கி வனசுந்தர தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435