பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்காக குழு அமைக்கத் திட்டம்

நாட்டில் தற்போது நிகழும் பாதுகாப்பு தொடர்பாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்கருதி நேற்றைய தினம் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று ராஜகிரியவில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இச்சந்திப்பில் பெருந்தோட்ட தொழிலாளர்களையும் அவர்கள் வசிக்கும் தோட்டப்புறங்களை பாதுகாகக்கவும் அத்தோட்டங்களின் தேயிலை தொழிற்சாலைகளை பாதுகாக்கவும் அத்தோடு தோட்டப்புறங்களில் வெளியாட்கள் உட் செல்வதை தடுப்பதற்கும் நாட்டில் நிலவும் அசாதாரன நிலையை கருத்திற்கொண்டு அவசரதேவைக்காக குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தோட்டதலைவர்கள், தலைவிகள், இளைஞர் சங்க தலைவர்கள், தோட்ட முகாமையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவொன்றை நியமித்து தோட்டப் புறங்களின் பாதுகாப்பை கண்கானிப்பது தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் உட்பட கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் முதலாளிமார் சம்மேளனத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435