பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு அஞ்சல் திணைக்களத்தில் தொழில்வாய்ப்பை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தனது அமைச்சின் மூலமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.
அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சின் ஏற்பாட்டில் அஞ்சல் திணைக்களத்தில் சிற்றூழியர்களுக்கான ஊழியர்கள் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.
இதில் மலையக இளைஞர் யுவதிகளையும் இணைத்துக் கொள்வது தொடர்பில் அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சுடன் தொடர்பு கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்க் கொண்டு வருவதாக பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான அஞ்சல் திணைக்களத்தின் சிற்றூழியர் சேவையின் தேவைக்காக தினசரி வேதன அடிப்படையில் கடமைகளை செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2019.04.01 முதல் பிரதேச அத்தியட்சகர் பிரிவு மட்டத்தில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கு ஊவா மாகாணம், மத்திய மாகாணம், சப்ரகமவ மாகாணம் உட்பட மலையத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இளைஞர் யுவதிகளும் விண்ணபிக்க முடியும்.
இச்சந்தர்பத்தை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.