பெருந்தோட்டத்துறைச்சார் சமூகநிலை பெண் தலைவர்கள் (பல்வேறு தொழிற்சங்கங்களின்) பாலின அடிப்படையிலான வன்முறைகள் தொடர்பில் தெளிவூட்டும் நிகழ்வு அண்மையில் ஹட்டனில் நடைபெற்றது.
சொலிடாரிட்டி சென்ரர் நிறுவனத்தின் அனுசரனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பணியிடங்களில் இடம்பெறும் பாலின அடிப்டையிலான வன்முறைகளை தடுப்பதற்கான சர்வதேச தொழிலாளர் அமையத்தின் (ILO) ஒப்பந்தம், பெருந்தோட்டத்துறையில் உள்ள பெண்கள் வீடுகள் மற்றும் தொழிலிடத்தில் முகங்கொடுக்கும் வன்முறைகள், பாலின அடிப்படையிலான பணியிடங்களில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் என்பன தொடர்பில் தோட்ட பெண் தொழிலாளர்கள் மத்தியில் தலைமைத்துவம் வகிக்கும் பெண்களுக்கு தௌிவூட்டப்பட்டது.
தொழிலாளர் தேசிய சங்கம், மலையக தொழிலாளர் முன்னணி, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தொழிற்சங்கங்களின் கீழ் மட்டத்தில் தலைமைத்துவம் வகிக்கும் பெண்களே இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வளவாளர்களாக பெண் பொலிஸ் உத்தியோகத்தர் திருமதி குமாரி விஜயதுங்க ஹட்டன் பொலிஸ் நிலையம், சட்டத்தரணி ஷஹானா ராசையா மற்றும் யோகேஸ்வரி பொன்னையா- சொலிடாரிட்டி சென்ரர் ஆகியோர் கலந்துகொண்டனர்.