பெற்றோலியவள கூட்டுத்தாபன பரீட்சையில் அநீதி

​பெற்றோலிய வளக்கூட்டுத்தாபன அபிவிருத்தி அமைச்சின் பாதுகாப்பு உதவியாளர் பதவிக்கான போட்டிப் பரீட்சை வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரே வௌியாகியுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.

18ஆம் திகதி நடைபெறவிருந்த பரீட்சை வினாத்தாள்களே அதற்கு முன்னரே வௌியாகியுள்ளன.

தெமட்டகொட புனித மத்தேயு கல்லூரியில் பரீட்சை நடைபெறுவதற்கு முன்னர் அப்பாடசாலை வகுப்பறையிலிருந்த குறித்த வினாத்தாள்களில் இருந்த கேள்விகள் மற்றும் அதற்கான விடைகள் கையெழுத்தினால் எழுதியிருந்த தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சி- 4 தர பாதுகாப்பு உதவியாளர் பரீட்சைக்கான பரீட்சைத் தாள்களில் இருந்த வினாக்களே இவ்வாறு எழுதி வழங்கப்பட்டுள்ளன என்பது பின்னரே அறியப்பட்டுள்ளன.

அதனால் இப்பரீட்சையின் ஒழுக்க விதிகள் மற்றும் உண்மையான தகைமைத் தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்டுள்ளதுடன், உண்மையான திறமையாளர்கள் தொழிலை பெற்றுக்கொள்ளும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளமையினால் மீண்டும் அப்பரீட்சையை நடத்துமாறு விண்ணப்பதாரிகள் கோரியுள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435