பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டமொன்றை நேற்றிரவு ஆரம்பித்துள்ளனர்.

முக்கியமான மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டத்தில் சுமூகமான தீர்வு கிடைக்காதபட்சத்தில் வேலைநிறுத்தத்தை தொடரப்போவதாக பெற்றோலிய தொழிற்சங்கங்களின் இணைப்பாளர் டி.கே ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்படி விடயம் தொடர்பில் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ள நிலையில் அதன் முடிவையொட்டியே தமது போராட்டம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தையினூடாக சுமூகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் சந்திம வீரக்கொடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பேச்சுவார்தைக்கான நேரம் காலை 9.00 மணி என அறிவிக்கப்பட்டிருந்தபோதிலும் 2.00 மணியளவிலேயே பேச்சுவார்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்போராட்டத்தின் காரணமாக பெற்றோலிய தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435