பேச்சு வார்தை தோல்வி- ஆர்ப்பாட்டம் உறுதி

தோட்ட தொழிலாளர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட நாள் ஒன்றுக்கு 100 ரூபா வீத அதிகரிப்பு தொகையை உறுதி செய்வது தொடர்பில் முதலாளிமார் சம்மேளனத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்குமிடையே நேற்று (24) மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து நாளை (26) ஆர்ப்பாட்டம் செய்ய முற்போக்குக் கூட்டணி தீர்மானித்துள்ளது.


தோட்ட தொழிலாளர்களுக்கான அதிகரித்த சம்பளமாக 100 ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இணக்கம் தெரிவிக்காததையடுத்தே பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவித்த கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் திட்டமிட்டவாறு போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்தின் மூலமாக தனியார் துறைக்கு பரிந்துரை செய்யப்பட்ட 2500 ரூபா சம்பள அதிகரிப்பு தொகையை தோட்ட தொழிலாளர்களுக்கும் பெற்று கொடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தொழில் உற­வுகள் அமைச்சர் ஜோன் செனவிரத்னவினால் உறுதியளிக்கப்பட்டிருந்தது. எனினும் அது நடைபெறவில்லை.

இந்நிலையிலேயே நாள் ஒன்றுக்கு 100 ரூபாவை பெற்று கொடுப்பதாக அறிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணி முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதாகவும் தோல்வியடைந்தால் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435