பொதுசேவை தாதியர் ஐக்கிய சங்கத்தின் தொழிற்சங்க நடவக்கை

பொதுசேவை தாதியர்கள் ஐக்கிய சங்கம் கடந்த 26ஆம் திகதி முதல் 28 ஆம் திகதிவரை இரண்டு நாட்கள் அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுகயீன விடுமுறை போராட்டமாக பொதுசேவை தாதியர்கள் ஐக்கிய சங்கத்தினர் இந்த தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

இந்தப் போராட்டம் காரணமாக, நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளின் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டன. நோயாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். மருத்துவர்களும் சிரமங்களுக்கு முகங்கொடுத்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் உரிய தீர்வை வழங்கவில்லை எனத் தெரிவித்தே இந்த சுகயீன விடுமுறை போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக பொதுசேவை தாதியர்கள் ஐக்கிய சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவத்தே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்களின் கோரிக்கை பின்வருமாறு

01. விபத்து உதவித்தொகையாக 10,000 ரூபாவை பெற்றுக்கொடுத்தல்.

02. சீருடைக்காக வழங்கப்படும் கொடுப்பனவை வருடமொன்றுக்கு 25,000 வரை அதிகரித்தல்.

03. தனியார் நிறுவனங்களில் தாதியர்கள் பணம் செலுததி பட்டம் பெற்றுக்கொள்ளல்.

04. தாதியர் கல்லூரியைச் சேர்ந்த அனைத்து தாதியர்களையும் உயர்கல்வி அமைச்சின்கீழ் உள்வாங்குதல்.

05. 2006ஃ6 சுற்றறிக்கையின் பிரகாரம்தாதியர்களின் ஊழியர் நிலைமை இல்லாதுபோகின்றமை.

06. பதவி உயர்வு உரிய காலத்தில் வழங்கப்படாமை

முதலான கோரிக்கைளை முன்வைத்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும், இந்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு அகில இலங்கை தாதியர் சங்கம் ஆதரவளித்திருக்கவில்லை.

குறித்த கோரிக்கைகளை முன்வைத்து எதிர்காலத்தில் அனைத்து தரப்பினரையும் ஒன்றிணைத்து பொதுவான ஒரு தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக அந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான பின்னணியில், தாதியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

பொதுசேவை ஐக்கிய தாதியர்கள் சங்கம் மற்றும் அரச தாதிய அதிகாரிகள் சங்கம் ஆகிய தரப்பினருடன் அண்மையில் இடம்பெற்ற இரண்டு பேச்சுவார்த்தைகளில், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

எனினும், வேதனம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான கோரிக்கைகள் குறித்து தேசிய வேதன ஆணைக்குழுவின் ஊடாகவே தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும், தமது இரண்டு நாட்கள் சுகயீன விடுமுறை போராட்டம் வெற்றியளித்துள்ளதாக பொதுசேவை தாதியர்கள் ஐக்கிய தொழிற்சங்கத்தின் தலைவர் முருத்தெட்டுவத்தே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எதிர்வரும் 31ஆம் திகதி இடம்பெறவுள்ள தமது பொதுக்குழுக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடி தீர்மானிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் பொதுசேவை தாதியர்கள் ஐக்கிய சங்கத்தினர் முன்னெடுத்;த போராட்டத்தின் காரணமாக தாங்கள் மிகவும் பாதிக்கப்;பட்டதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தி தாதியர்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், நோயாளர்களின் நலன்கருதி தாதியர்களும் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும் என்றும், நோயாளர்களை அசௌகரியத்திற்குள் உள்ளாக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுக்கக்கூடாது என்றும் நோயாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435