இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது நாடாளுமன்றத்திற்கான புதிய உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகினறது.
காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது.
பொது தேர்தலில் வாக்களிப்பதற்காக 1 கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்களர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் 12 ஆயிரத்து 985 வாக்களிப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரை தெரிவு செய்வதற்காக 22 தேர்தல் மாவட்டங்களை பிரநிதித்துவப்படுத்தி 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் 3 ஆயிரத்து 652 பேர் அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளை பிரதிநிதிப்படுத்தி போட்டியிடுவதுடன் 3 ஆயிரத்து 800 பேர் சுயேட்சை குழுக்களில் போட்டியிடுகின்றனர்.