
வியட்நாமில் தொழில்வாய்ப்பைப் பெற்றுத்தருவதாக கூறி சுமார் 13 இலட்சம் ரூபா பணமோசடி செய்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹொறவபொத்தான, பறங்கியாவாடிய என்ற பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 25ம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் ஹொரவபொத்தான பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கமைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.