பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய சுகாதார வழிகாட்டல் ஆலோசனைகள அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், வாக்காளர்களும் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சர் இந்த அதிவிசேட வர்த்தமானியில் கையொப்பமிட்டுள்ளார்.
இதற்கமைய, அரசியல் கூட்டங்களை ஒழுங்கு செய்பவர்கள் அது பற்றி 24 மணித்தியாலங்களுக்குள் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிப்பது அவசியமாகும்.
ஒரு கூட்டத்தில் 300ற்கும் மேற்பட்டோர பங்குகொள்ளக்கூடாது. ஆனால் அரசியல் கட்சி ஒன்றின் அல்லது சுயேச்சைக் குழுவின் தலைவர் பங்கேற்கும் கூட்டமொன்றில் 500 ஆதரவாளர்கள் பங்கேற்க முடியும். அனைவரும் சமூக இடைவெளியைப் பேணுவது அவசியம் என்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி கீழே இணைக்கப்பட்டுள்ளது.