பொதுப்போக்குவரத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுத்தல்

பொதுவாக நோக்குமிடத்து மூன்று பெண்களில் ஒருவர் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முகங்கொடுத்தவளாக இருக்கிறாள். அவ்வாறு பார்க்கையில் உலகில் அதிகமாக இடம்பெறும் மனித உரிமை மீறல்களில் ஒன்றாக பாலின அடிப்படையிலான வன்முறை காணப்படுகிறது என பாலின சமத்துவத்திற்காக வாதிடும் குழு தெரிவித்துள்ளது.

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான வருடாந்த சர்வதேச பிரசார நடவடிகை நேற்றுமுன்தினம் (25) ஆரம்பித்தன் நிமித்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றிலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

எனினும் அது குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. இவ்விடயம் குறித்து கதைப்பது கேவலமான விடயமாகவும் தடை செய்யப்பட்ட விடயமுமாக சமூகம் பார்ப்பதே இதற்கான காரணமாகும். மேலும் சமூகம் அவ்வாறு கதைப்பதை வன்மையாக கண்டிக்கிறது. வன்முறைக்குட்படாது வாழும் மனித உரிமையானது இல்லாது போகும் போது நாம் மென்மேலும் வன்முறைகளுக்கும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். தனிநபராகவும் பொதுவாகவும் அதிகமாக சமூகத்தின் கவனத்தை பெறுகிறோம்.

இலங்கை பெண்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு பாதிக்கப்பட்டுள்ளனர், நான்கு சதவீதத்துக்கும் குறைவானவர்கள் சட்ட ரீதியான உதவியை நாடுகின்றனர் என்று  பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம், இலங்கையில் பாலின சமத்துவத்தை எளிதாக்கும் நோக்கில் செயல்படும் அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் ஒன்றியம் இந்நிகழ்வின் போது தெரிவித்தன.

மன்றத்தின் இணைத் தலைவரும், ஒக்ஸ்பாம் அமைப்பின் இலங்கைக்கான இயக்குநருமான போஜன் கொலுண்ட்ஜிஜா கருத்து தெரிவிக்கையில் பாலின அடிப்படையிலான வன்முறையானது உலகம் முழுவதும் பரவலாகவும் ஆழமாகவும் வேரூன்றியுள்ளது, எனவே இது உலகளாவிய பிரச்சினையாக கருதப்பட வேண்டும் என்றார்.

பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு சுமார் 30 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அருகில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, இலங்கையில் பொது போக்குவரத்தில் நடக்கும் வன்முறைகளுக்கு தீர்வு காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். 90 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களும் சிறுமிகளும் பொதுப் போக்குவரத்தில் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்பதை நாங்கள் உணர்கிறோம், ”என்று அவர் கூறினார்.

இலங்கையில் ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் (UNPF) பிரதிநிதி ரிட்ச் நாக்கன் கருத்து தெரிவிக்கையில், பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு தீர்வு காண இலங்கையில் பல வெற்றிகரமான முயற்சிகள் இருந்தபோதிலும், அதை முற்றிலுமாக அகற்றுவது என்பது தொலைதூர கனவாகவேயுள்ளது என்றார்

“ஒன்று மிகவும் தெளிவாக உள்ளது. நாங்கள் பல குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை காணப்பட்டபோதிலும் முற்றிலும் இல்லாதொழிப்பது என்பது தொலைதூர கனவாகவேயுள்ளது. பாலின அடிப்படையிலான வன்முறைகளை முற்றாக இல்லாதொழிப்பதற்கு பிரதான தடையாக இருப்பது அதனை பாரிய குற்றமாக இன்னும் பார்க்கப்படாமையாகும். பொலிஸ் பதிவுகள் அறிக்கையிடப்பட்ட வழக்குகளை மட்டுமே உள்ளடக்குகின்றன. இது பனிப்பாறையின் முனை என்று மட்டுமே எங்களுக்குத் தெரியும்; பொதுப் போக்குவரத்து மீதான பாலியல் துன்புறுத்தல் குறித்த எங்கள் ஆய்வில், பெரும்பாலான பெண்கள் மற்றும் சிறுமிகள் காவல்துறைக்கு புகார் அளிக்கவில்லை, ”என்று நக்கன் கூறினார்.

பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக போராட ஆண்களை ஊக்குவிக்கும் மென்எங்கேஜ் அலையன்ஸ் என்ற அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாலின சமத்துவ நிபுணர் வேலுசாமி வீரசிங்கம், பொது போக்குவரத்தில் பாலின அடிப்படையிலான வன்முறைகளை இல்லாதொழிப்பதற்கு தாம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து விபரித்தார்.

“நாங்கள் நாட்டில் மூன்று பகுதிகளைத் தேர்ந்தெடுத்தோம்; அதாவது கொழும்பு, களுத்துறை மற்றும் கிழக்கு மாகாணம். தேர்ந்தெடுக்கப்பட்ட பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு நாங்கள் பயிற்சி அளித்தோம், பேருந்துகளில் இடம்பெறும் பாலின அடிப்படையிலான வன்முறைகளின்போது எவ்வாறு தலையிட வேண்டும் என்பதை அவர்களுக்குக் கற்பித்தோம். 2010 ஆம் ஆண்டில், நாங்கள் 13 பேருந்து வழித்தடத்தில் ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கினோம், ஜிபிவி இன்னும் நடைமுறையில் உள்ளது என்பதை நாங்கள் அறிந்தோம். புகார்களைக் கையாளுதல், தொடர்புடைய வழக்குகளை விசாரித்தல் மற்றும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பதில் நாங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தோம், ”என்றார்.

எவ்வாறாயினும், முறைப்பாடுகளை செய்வதனூடாக பாலின அடிப்படையிலான வன்முறைகளை ஒழிக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய வீரசிங்கம்,
“நாங்கள் ஆரம்பித்த மற்றொரு திட்டத்தின் ஒரு பகுதியாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எங்களிடமிருந்து ஒரு பயிற்சி கையேட்டைக் கோரியது. நாங்கள் மூன்று மொழிகளிலும் அதை வெளியிட்டோம், மேலும் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு பயிற்சி அளிக்கும் அதிகாரிகளுக்கும் பயிற்சி அளித்தோம், ”என்று அவர் மேலும் கூறினார்.

இப்பிரசார நடவடிக்கையானது கடந்த 1991ம் ஆண்டு சர்வதேச பெண் தலைமைத்துவ நிறுவத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435