பொது போக்குவரத்து சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து மீண்டும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (27) வௌியிட்டுள்ளார்.
அதற்கமைய, பயணிகள் மற்றும் பொருட்கள் போக்குவரத்துக்கான அனைத்து சேவைகள் மற்றும் புகையிரத சேவையுடன் தொடர்புபட்ட அனைத்து சேவைகளும் அத்தியவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுபோக்குவரத்து சேவையை அத்தியவசிய சேவையாக அறிவித்து கடந்த மாதமும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.