பொய்யான குடும்ப பின்னணி அறிக்கை- அபிவிருத்தி அதிகாரி கைது

பொய்யான குடும்ப பின்னணி தகவலை தயாரித்து பெண்ணொருவரை சவுதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக அனுப்ப உதவி வழங்கிய அபிவிருத்தி அதிகாரியொருவரை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கொலன்னாவ பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி அதிகாரியாக நியமனம் பெற்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சில் தற்போது கடமையாற்றும் அதிகாரியொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பணிப்பெண்ணாக அனுப்புவதற்கான போலியான குடும்ப பின்னணியை தயாரித்து அதனை உறுதிப்படுத்தி குறுந்தகவல் மூலமாக அதனை உறுதிபடுத்திய குறித்த அதிகாரி கடந்த 19ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌிநாடு செல்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு சென்ற குறித்த பெண் தான் 3 மாத கர்ப்பிணியென்றும் தம்மை பலவந்தமாக வௌிநாட்டுக்கு அனுப்ப முயற்சி செய்வதாகவும் பணியக விசேட விசாரணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த குழு குறித்த அதிகாரியை கைது செய்துள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கொழும்பு முகவரியொன்றினூடாக வௌிநாட்டு வேலைக்காக பதிவு செய்துள்ளார் என்றும் கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இருந்து பெற்று போலியான குடும்ப பின்னணி அறிக்கையை தயார் செய்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435