பொலித்தீன் தடை: உற்பத்தியாளர்கள் கூறுவது என்ன?

பொலித்தீன் பாவனையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்வதாக அரசாங்கம் கூறியுள்ளது.

இந்த நிலையில், அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து, பொலித்தீன் உற்பத்தி மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்த்தினர் இவ்வாறு கருத்து வெளியிடுகின்றனர்.
விஜித வர்ணகுலசூரிய
உப செயலாளர்
பொலித்தீன் உற்பத்தி மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கம்

பொலித்தீன் உற்பத்திகள் மற்றும் பாவனைக்கு செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து அரசாங்கம் தடை விதிததுள்ளது. மிகவும் குறுகியகாலத்துக்குள்தான் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எமக்கு மாற்று உபாயமொன்றை ஏற்பாடுசெய்வதற்கான காலமொன்றை வழங்க வேண்டும் என சுற்றுச்கூழல் அமைச்சிடம் நாம் கேட்கின்றோம். எனவே, இது குறித்து ஜனாதிபதி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரும் நோக்கில் நாம் போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினார்.
எஸ்.பெரேரா
அங்கத்தவர்
பொலித்தீன் உற்பத்திளார்கள் மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கம்
அரசாங்கத்துக்கு வரிசெலுத்தியே நாம் இந்தப் பணியை மேற்கொள்கின்றோம். இந்த நிலையில், பொலிதீனை தடை செய்வதாக அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்கத்துக்கு நாம் மாற்றுவழியை முன்வைத்துள்ளோம். உக்கக்கூடிய பொலித்தீனை அறிமுகப்படுத்த நாம் விரும்புகின்றோம். ஆனால், அதனை அவர்கள் விரும்பவில்லை.

பல்தேசிய நிறுவனங்களால் கொண்டுவரப்பட்டுள்ள ஒருவகை மூலப்பொருளை பயன்படுத்துமாறு அரசாங்கம் கூறுகின்றது. ஆனால், அது தற்போது நாம் செலவு செய்வதைவிட நான்கு, ஐந்து மடங்கு செலவு அதிகமானதாகும். அதனை நாம் விரும்பவில்லை.

ஏனெனில், உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது உக்கக்கூடிய பொலித்தீன் பாவனையை நோக்கி செல்கிறது. இந்த நிலையில், அரசாங்கம் கூறும் மாற்றுவழிக்கு செல்ல நாம் தயாரில்லை. எனவே, நாம் கூறும் மாற்றுவழிக்கு (உக்கக்கூடிய பொலித்தீன் உற்பத்திக்கு) சந்தர்ப்பமளிக்குமாறே நாம் கூறுகின்றோம்.

இதேவேளை, நாம் கொண்டுவந்துள்ள மூலதனப் பொருட்கள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் என்பன அவ்வாறே உள்ளன. அதுமட்டுமன்றி உக்கக்கூடிய பொலித்தீன் தயாரிப்பை மேற்கொள்வதற்கு எமக்கு போதுமான கால அவகாசம் வேண்டும். ஆனால், 45 நாட்கள் என்ற குறுகிய கால அவகாசமே வழங்கப்பட்டது. இந்தக் காலப்பகுதியில் எமக்கு மாற்றுத்திட்டத்துக்கு செல்லமுடியாது. ஏன்று குறிப்பிட்டார்.

இதேவேளை, அந்த சங்கத்தின் மற்றுமொரு உறுப்பினர் கருத்து வெளியிடுகையில்,

பொலித்தீன் பயன்பாட்டால் ஏற்படும் சூழல் பாதிப்பு குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தகிறது. ஆனால். போலித்தீன் உற்பத்தியை தடை செய்வதால், வேலைவாய்ப்பை இழந்து பாதிக்கப்படுபவர்களைப் பற்றி அது கவனம் செலுத்தவில்லை.

பொலித்தீன் என்பது அவசியமனதொரு பொருளாகும். இந்த நிலையில், அதை தடைசெய்வதாக கூறும் அரசாங்கம், அதற்கான மாற்றுத் திட்டத்தை முன்வைக்கவில்லை.

பொலித்தீன் பயன்பாட்டில் பிரச்சினை இல்லை. அதை உரிய முறையில் முகாமைத்துவம் செய்யாதமையே பிரச்சினையாகும்.

கழிவுகளாக வெளியேற்றப்படும் பொலித்தீனை உரிய முறையில் சேகரித்து, அதனை முகாமைத்துவம் செய்யவேண்டும். மாநகரசபை, நகர சபை மற்றும் பிரதேச சபை என்பவற்றினூடாக அவற்றை உரிய முறையில் சேகரித்து வழங்கினால், மீள்சுழற்சி செய்யலாம். எனவே, இவை தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435