இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் விசேட கொடுப்பனவை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.
அவர்களுடைய வேலைநாட்களில் 20 நாளுக்கான கொடுப்பனவு சம்பளத்திற்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.
நிதியமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.டீ விக்கரமசிங்க ஆகியோருக்கு இடையில் பல மாதங்களாக இடம்பெற்றுவந்த பேச்சுவார்த்தைக்கமைய இக்கொடுப்பனவு வழங்கப்படுவதாக திரைசேரி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதற்கமைய, பொலிஸ் அதிகாரிகளுக்கு மாதாந்தம் 14,000 ரூபா தொடக்கம் 20,000 ரூபா வரையில் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
இதுவரையில் பொலிஸ் பிரிவுக்கு வௌியே பணியாற்றிய அதிகாரிகளுக்கு மட்டுமே கொடுப்பனவு வழங்கப்பட்டன. இனி வரும் காலங்களில் அனைத்து அதிகாரிகளுக்கும் இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
பொலிஸ் சேவையில் தற்போது சுமார் 75,000 பேர் வரை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.