பொலிஸ் அதிகாரிகள் 31,000 பேருக்கு பதவியுயர்வு

பொலிஸ் அதிகாரிகள் 31,000 பேருக்கு பதவியுயர்வு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொலிஸ் கான்ஸ்டபில்களை பிரதான பொலிஸ் ஆய்வாளர்களாக பதவியுயர்த்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவதற்கான செயல்திட்டத்தை நிதியமைச்சின் முகாமைத்துவ சேவைகள் திணைக்களமானது பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து நடைமுறைப்படுத்துகிறது.

தற்போது பொலிஸ் திணைக்களத்தில் 85,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 31,540 பேர் கான்ஸ்டபிள்களாகவும் ஆய்வாளர்களாகவும் பணியாற்றுகின்றனர். பெரும்பாலான கான்ஸ்டபில்கள் தமது பதவிக்காலம் பூர்த்தியடைந்த நிலையில் பதவியுயர்வு வழங்கப்படாமல் இருப்பதை கவனத்திற்ககொண்ட பொலிஸ் திணைக்களம் கடந்த மார்ச் மாதம் பதவியுயர்வுக்கான பொறிமுறையொன்றை உருவாக்குமாறு பாதுகாப்பு அமைச்சினூடாக நியமைச்சின் முகாமைத்துவ திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.

குறித்த பதவியுயர்வுகள் தொடர்பில் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் விரைவில் செயற்படுத்தப்படும் என்றும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435