போக்குவரத்தை இலகுவாக்கும் MYBUS lk செயலி நாளை அறிமுகம்

பொது போக்குவரத்தை இலகுபடுத்துவதற்காக MYBUS lk செயலியை நாளை (07) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்துசபை தெரிவித்துள்ளது.

பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் பயணிகள் அலைச்சல் இன்றி பயணிக்கவேண்டிய பஸ் குறித்த தகவல்களை பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தும் வகையில் இச்செயலி தயார்படுத்தப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசியில் குறித்த செயலியை தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும்,

குறித்த செயலியை தயாரிப்பதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது. பாரிய தொகைப் பணமும் அதற்காக செலவிடப்பட்டிருந்தபோதிலும் செயலி முழுமையாக்கப்படாமல் இருந்தது. எனினும் போக்குவரத்து ஆணைக்குழுவில் முகாமையாளராக பணியாற்றும் இளம் பட்டதாரியொருவரான நுவன் செனவிரத்ன ஆணைக்குழுவின் பணத்தை பயன்படுத்தாமல் தனியாக குறித்த செயலியை வெற்றிகரமாக முழுமைப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பஸ் பயணத்தை ஆரம்பிக்கும் நேரம், சென்றடையும் நேரம், பயணிகள் பஸ்ஸில் ஏறவேண்டிய இடத்தில் இருந்து இறங்கும் இடம் வரையான கட்டணம், ஏறவேண்டிய பஸ் இருக்கும் இடத்தை அறியும் Tracking, முறைப்பாடு செய்யும் வசதி என்பன அச்சசெயலியில் காணப்படுகின்றன.

 

அரசாங்க தகவல் திணைக்களம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435