போராடும் பட்டதாரிகள் ஏன் ஆசிரியர் சேவையில் இணைக்கக்கூடாதூ?

​அரச நியமனங்கள் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளை பெருந்தோட்டத்துறை மற்றும் தமிழ் பிரதேச பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய பிரதேசங்களில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை ஆசிரியர் சேவையில் நிலவும் 3202 வெற்றிடங்களில் இணைத்துக்கொள்ளுமாறு தொழிற்சங்கம் கோரியுள்ளது.

மேற்கூறப்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 20,000 பட்டதாரிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேற்பட்ட காலம் போராட்டத்தில் ஈடபட்டு வருகின்றனர். குறித்த பட்டதாரிகளுக்கு ஆசியரியர் பயிற்சி வழங்கி ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள முடியும் என்று புத்திஜீவிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளமையினால் தகுதிக்கேற்ப நியமனங்களை வழங்க முடியும் என்று இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435