எதிர்வரும் 29 ஆம் திகதி முதல், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தடுப்பு பணிகள் உட்பட ஏனைய அனைத்து தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளிலிருந்தும் விலக உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹண குற்றம் சுமத்தியுள்ளார்.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளின்போது, பொது சுகாதார பரிசோதகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு, சுகாதார அமைச்சு இதுவரை தவறியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேநேரம், எதிர்வரும் 29ஆம் திகதி முதல் தேர்தல் கடமைகளிலிருந்தும் விலகுவதாகவும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.