அம்பாந்தோட்டை துறைமுகத்தை தனியார்துறைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (27) துறைமுக ஊழியர்கள் போராட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திரசிறி மஹாகமகேக 27ம் திகதி ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து 28ம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.