போலி சான்றிதழ்கள் கையளித்து அதிபர் மற்றும் ஆசிரியர் சேவையில் இணைந்துள்ளனர் என்று கடந்த 2015ம் ஆண்டு குற்றஞ்சாட்டப்பட்ட 76 பேர் தெற்கில் அடையாளங்காணப்பட்டுள்ளனனர் என்று கணக்காய்வு அறிக்கையொன்றில்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் 5 பேர் குறித்த குற்றச்சாட்டில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 12 பேர் சேவைக் காலத்தை பூர்த்தி செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட மிகுதி 59 பேருக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை 2015ம் ஆண்டின் இறுதியிலும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 39 அரச ஊழியர்களுக்கு கடந்த 2015ம் ஆண்டு நூற்று அறுபத்திரண்டு இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகை சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
கணக்காய்வாளர் திணைக்களத்தினால் 2015ம் ஆண்டு தெற்கு மாகாணசபையின் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு அறிக்கையில் மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.