
போலி கடவுச்சீட்டுடன் குளியாபிட்டிய, தண்டகமுவ பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல பிரதேச விசேட அதிரடிப்படையினரினால் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குளியாப்பிட்டிய பொலிஸ் மேற்கொண்டு வருகிறது.