ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் கிளைகள் மலையகத்திலும்

ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் லக்‌ஷபான, ஹட்டன் பிரதேசங்களுக்கான கிளைகள் கடந்த 25ம்திகதி ஆரம்பிக்கப்பட்டன.

ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 3 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ள முறைசாரா தொழிற்றுறைசார் ஊழியர்களின் சங்கமாக கொழும்பை அண்மித்த பகுதியில் மட்டுமே இயங்கி வந்த தற்போது மலையகத்திற்கும் அதன் கிளைகள் விரிவடைந்துள்ளமை மாபெரும் வெற்றியாகும்.

முறைசாரா தொழிற்சார் ஊழியர்களை இணைத்து செயற்படுவது என்று கடந்த வருடம் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் ஒரு பகுதியாக இக்கிளைகள் ஆரம்பிக்கப்பட்டன. ப்ரொடெக்ட் தொழிற்சங்கத்தின் மூன்றாவது ஆண்டு விழா கடந்த வாரம் இடம்பெற்றது.

இத்தொழிற்சங்கத்தின் அங்கத்தவர்களாக இணைந்துள்ள முறைசாரா தொழிற்சார் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாவர். நன்மைப்பயக்கக்கூடிய நிபந்தனைகள், உரிமைகள், கண்ணியம் கொண்ட தொழிலாக வீட்டுப் பணியை நாட்டில் செயற்படுத்து குறித்த இவ்வாண்டு விழாவில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும், சர்வதேச தொழிலாளர் அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட வீட்டுப் பணிப்பெண்களுக்கான கண்ணியமான தொழில் என்ற நோக்கில் ILO C189 பிரகடனத்தை நாட்டில் அங்கீகரித்தல் மற்றும் அதன் முன்மொழிவுகளுக்கமைய வீட்டுப் பணிப்பெண்களுக்கு அரசினூடாக ஏற்றுக்கொள்ளத்தக்க உறுதியான செயற்றிட்டமொன்றை தயாரித்தல் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

முறைசார் மற்றும் முறைசாரா துறைசார் தொழிலாளர்களின் தொழில் பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமையை வென்றெடுத்தல் என்பவற்றுக்காக முன்னின்று போராடுவதே இச்சங்கத்தின் நோக்கமாகும்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435