மட்டு பட்டதாரிகள் பிரச்சினைக்கு உரிய தீர்வு விரைவில்- பிரதமர்

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகளின் தொழிலில்லா பிரச்சினைக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார் என்று பிரதியமைச்சர் எஸ்.எஸ்.எம் அமீர் அலி தெரிவித்தார்.

பிரதியமைச்சர் அமிர் அலிக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த வாரம் இறுதியில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது பிரதமர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின் போது, எதிர்வரும் நாட்களில் மட்டு பட்டதாரிகளின் தொழிலில்லா பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தி உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க தாம் தயாராக உள்ளதாக உறுதியளித்துள்ளார்.

மேற்படி விவகாரம் தொடர்பான மேலதிக கலந்துரையாடல் ஒன்று இன்னும் சில தினங்களில் இடம்பெறவுள்ளது என்றும் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கிழக்கு பட்டதாரிகள் எதிர்நோக்கும் தொழிலில்லா பிரச்சினை தொடர்பில் பிரதமர் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரட்ணம் பிரதியமைச்சரிடம் வேண்டுகோள்விடுத்ததையடுத்தே இப்பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435