மத்திய கிழக்கில் வடக்குப் பெண்களின் தலைவிதி!

வட மாகாணத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் அதிகமான பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக சென்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

வடமாகாணத்தில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களாக செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஆரம்ப காலங்களில் மிகவும் குறைவாகவே இருந்தது.

ஆனால், கடந்த 2015 ஆம் மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் அதிகமான வடக்குப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றிருக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் கணவனை இழந்த பெண்கள், தமது குடும்பங்களுக்கு தலைமையேற்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் தமது குடும்பங்களின் வாழ்வாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்காக செல்லும் நிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வடக்கில் இருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக, யாழ்ப்பாணத்தில் இயங்கும் சமூக சேவைகள் அமைப்பொன்றினதும், மத்திய வங்கியினதும் தரவுகளை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

போரினால், பாதிக்கப்பட்டு கணவர்மாரை இழந்த குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் பெண்கள் தமது குடும்பங்களை காப்பாற்றுவதற்காக மத்திய கிழக்கு நாடுகளின் பணிகளுக்கு உடன்படுகின்றனர்.

எனினும், அவர்கள் ஓமானின் மஸ்கட் நகருக்கு அழைத்துச்செல்லப்பட்டு அடிமைகளாக நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பல பெண்கள் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

‘தாம் மஸ்கட் நகருக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு ஒரு சிறிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

‘பின்னர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வீடுகளுக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு பணியாற்ற பணிக்கப்பட்டுள்ளனர்.
‘இதனையடுத்து, இரவில் மீண்டும் சிறிய அறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்,

‘இந்த நிலையில் தம்மைப்போன்று பல பெண்கள் இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்தாக அங்கிருந்து இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

‘தமக்கு உரிய சம்பளங்கள் வழங்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்’ – என்று சர்வதேச ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435