* பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 750 ரூபா வழங்கப்படுகின்றது. அத்துடன், 18 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிந்தால் மேலதிக கிலோவொன்றுக்கு 40 ரூபா வீதம் வழங்கப்படுகின்றது.
இதன்படி மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் உழைக்கின்றனர் என தகவல் கிடைத்துள்ளது.
*பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே நிர்ணயிக்கப்படுகின்றது. எனவே, அந்த கூட்டு பொறுப்பை மீறமுடியாது.
தோட்டத்தொழிலாளர்களுக்கு 50 ரூபா வழங்குவதாக இருந்தால் அதை மக்கள் பணத்திலிருந்தே வழங்கவேண்டும். எதிர்காலத்தில் ஏனைய துறையினரும் இவ்வாறு கொடுப்பனவு கோரலாம். அந்த நிலைக்கு நாம் செல்லக்கூடாது.
சம்பள அதிகரிப்பானது கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாகவே இடம்பெறவேண்டும்.
* தற்போது வெளியார் உற்பத்தில் (out grow model ) தொடர்பில் கலந்துரையாடிவருகின்றோம். பெருந்தோட்டங்களை தொழிலாளர்களுக்கே வழங்கி, உரம் உள்ளிட்ட மானியங்களை வழங்கி, அவர்களிடமிருந்து தேயிலையை விலைக்கு வாங்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது. இந்த முறையே தீர்வாக இருக்கும் என நினைக்கின்றேன்.
*தற்போது வழங்கப்படுகின்ற சம்பளத்தை விடவும் குறைந்த தொகைக்கு வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை கொண்டுவரமுடியும் என கூறப்படுகின்றது. ஆனால், பிரச்சினைகள் உருவாகும். இதனால் அதற்கு நாம் உடன்படவில்லை.
* 73 சதவீதமான தேயிலையை சிறுதோட்ட உரிமையாளர்களிடமிருந்தே பெறுகின்றோம்.
பெருந்தோட்டக் கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க சுயாதீன தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் ஒரு பகுதி
நன்றி- சனத்
வேலைத்தளம்