மத்திய தபால் பரிமாற்ற பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி கடிதம் கிடைக்கப்பெற்றதை அடுத்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற சேவையாளர்கள் முன்னெடுத்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மகிந்த தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்கு ஆவண விநியோக முறைமை மாற்றத்திற்கு எதிராக கொழும்பு மத்திய தபால் பரிமாற்றத்தின் சேவையாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டு வந்தனர்.

தபால்மூல வாக்கு ஆவண விநியோகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் இதற்கு முன்னர் கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது அது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435