மரண தண்டனையால் ஜீஎஸ்பீ பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் அபாயத்தில் இலங்கை

இலங்கையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள ஜீஎஸ்பீ பிளஸ் வரிச்சலுகை நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இராஜதந்திர தரப்புக்களை மேற்கோள் காட்டி பிரான்ஸ் ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

அபிவிருத்தி அடைந்தவரும் நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற மனித உரிமை பாதுகாப்பு நடவடிக்கைகளை கௌரவிக்கும் நோக்குடன் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கைகள் என்பனவற்றை கருத்தில் கொண்டு கடந்த 2010ஆம் ஆண்டு ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது.

கடந்த 2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் 7 வருடங்களின் பின்னர் மீண்டும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை இலங்கைக்கு வழங்கப்பட்டது.

இதன்மூலம் இலங்கைக்கு வருடாந்தம் 300 மில்லியன் யூரோ லாபம் கிடைப்பதாக ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில், போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஆவணத்தில் கைச்சாத்திட உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

1976ஆம் ஆண்டின் பின்னர் 42 வருடங்களை அடுத்து இலங்கை மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தத் தீர்மானத்திற்க அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டார்கள் ஆகியோரிடமிருந்து விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் மரண தண்டனை விரும்பாது என்று அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, இலங்கையின் மரண தண்டனை தீர்மானத்தை தாங்கள் முழுமையாக எதிர்ப்பதாககனடா மற்றும் நோர்வே நாடுகளுடன் இணைந்து ஐரோப்பிய ஒன்றியம் அறிக்iயொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435