மருத்துவக்கல்வியை பூர்த்தி செய்த 1401 பேருக்கு உள்ளக மருத்துவப் பயிற்சி

உள்நாட்டிலும் வௌிநாட்டிலும் மருத்துவக்கல்வியை பூர்த்தி செய்த 1401 பேருக்கு உள்ளக மருத்துவர் பயிற்சி நியமனங்கள் வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

2011 – 2012ம் ஆண்டுக்கான உள்ளக பயிற்சி நியமனங்களே வழங்கப்பட்டுள்ளன.

இலங்கை பல்கலைக்கழகங்களின் வைத்திய பீடங்களில் தமது பட்டப்படிப்பை பூர்த்தி செய்த 1097 பேருக்கும் வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவக்கல்வியை பூர்த்தி செய்த 225 பேருக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்வியை பூர்த்தி செய்தவர்களுக்கும் இந்நியமனங்கள் வழங்கப்பட்டன.

வௌிநோயாளர், சத்திரசிகிச்சை, சிறுவர் நோய், மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் ஆகிய துறைகளுக்கு இந்நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

விசேட வைத்திய நிபுணர் ஒருவரின் 4 பேர் என்ற வகையில் நியமிக்கப்பட்டு இவ்வுள்ளக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

போதனா வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள், மாகாண வைத்தியசாலைகள் மற்றும் பிரதான வைத்தியசாலைகளில் இப்புதிய மருத்துவர்கள் அவர்களுடைய உள்ளக பயிற்சிகளை ஒரு வருடத்திற்கு பெற்றுக்கொள்வர்.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435