மருத்துவர்களின் கோரிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளுக்கு பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கல்வியமைச்சு முயற்சித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏனைய பிள்ளைகளின் உரிமைகளை பறிக்கும் வகையில் எடுக்கப்படும் இத்தகைய முடிவுகளை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் இத்தகைய கோரிக்கைகள் ஏனைய பிள்ளைகளின் உரிமையை பறிக்கும் செயல் மட்டுமல்ல, அரச பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான அரச சுற்றுநிரூபங்களையு ம் மீறும் செயலாகும். இதனை தடுப்பதற்கு நாம் நீதிமன்ற உதவியை நாடுவோம். ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி 40 ஆக மாற்றியுள்ளது. இந்நிலையில் மருத்துவர்களின் பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு செய்ய முற்பட்டால் புலமைபரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கான ஒதுக்கீட்டை குறைக்க வேண்டிய நிலை ஏற்படும். எந்தவொரு காரணத்திற்காகவும் இதனை அனுமதிக்க முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

வேலைத்தளம்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435