மட்டக்களப்பு ஏறாவூர் மீராகேணி பிரதேச வைத்தியசாலைக்கு கடந்த இரண்டு தசாப்தம் கடந்துள்ள போதும் ஒரு நிரந்த வைத்தியர் இல்லாமையினால் குறித்த வைத்தியசாலைக்கு நிரந்த வைத்தியரொருவரை நியமிக்குமாறு இன்று (23) பொது மக்களினால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 1995ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தளவாய், சவுக்கடி, மிச்நகர், தாமரைக்கேணி, ஐயங்கேணி,மைத்துப்பிட்டி போன்ற பல கிராம மக்கள் நாளாந்தம் 100க்கு மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகைதருகின்றபோதும் வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாமையினால் நோயாளிகள் பெரும் சிரமப்படுவதாகவும், பொது மக்கள் பல கீலோ மீற்றர் தூரம் இருந்து குறித்த வைத்தியாலைக்கு சிகிச்சை பெறவந்தால் வைத்தியர் இல்லாத வைத்தியசாலையாகவே கடந்த காலங்களில் இருந்து இருக்கின்றது.
காலாகாலம் நியமிக்கப்படும் வைத்தியர்களின் வரவு சீராக அமைவதில்லை. வைத்தியசாலையை நம்பி போக்குவரத்து செலவு செய்து வைத்தியசாலைக்கு செல்லும் மக்களின் பிரச்சினையை இதுவரைக்கும் எவரும் கண்டுகொள்ளவில்லை.
குறித்த வைத்தியர் பிரச்சினையை மட்டக்களப்பு பிராந்திய வைத்திய காரியாலயம் கவனத்தில் எடுத்து உடனடியாக நிரந்தரமான வைத்தியரை நியமித்து தரவேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.