இலங்கை மருத்துவ கவுன்சில் தலைவர பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டமை சட்டவிரோத செயலாகும். அது தொடர்பில் ஆராய்வதற்கான ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஷெனால் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தனக்கு நெருக்கமான ஹரேந்திர டி சில்வாவை இலங்கை மருத்துவ கவுன்சில் தலைவராக நியமித்துள்ளார்.
மருத்துவர்களின் தரத்தை உறுதி செய்வதற்காக மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனம்” துறைசார் அமைச்சருக்கு தலைவர் உட்பட ஐந்து பேரை நியமிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவர் அதனை தவறாக பயன்படுத்தியுள்ளார். இது இலங்கை மருத்துவ கவுன்சிலுக்கு சர்வதேச ரீதியாக இருந்த நன்மதிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளது.
முன்னாள் அமைச்சருக்கு நெருக்கமானவர் குறித்த பதவியில் இருந்து நீக்கப்படவேண்டும். அல்லது தொடர்ச்சியான அவருடைய நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படும் என்றும் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.