மலையக ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு அவசியம்- ஜோசப் ஸ்டாலின்

மலையத்தில் நிலவும் ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வுகாண உடன் செயற்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் ஜோஸப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மலையகத்தில் நிலவும் ஆசிரியர் பிரச்சினை குறித்து வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி – மலையகத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை எந்தளவில் காணப்படுகிறது?

பதில் – பொதுவாக விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான ஆசியரியர்கள் பற்றாக்குறை காணப்படுகின்றன. அத்துடன், ஆரம்ப கல்விக்கான ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. சாதாரணமாக ஆயிரத்துக்கு மேற்பட்ட அளவில் ஆசியர் பற்றாக்குறை நிலவுகிறது.

கொழும்பு, களுத்துறை முதலான பகுதிகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளன. மேலும் தென் மாகாணத்தின் சில பகுதிகளிலும் இந்தப் பிரச்சினை காணப்படுகிறது. எனினும், ஆசிரியர் பிரச்சினைக்கு இதுவரை நிரந்த தீர்வொன்று இல்லை.

கேள்வி – ஓய்வுபெற்ற ஆசியரியர்களை மீண்டும் சேவையில் இக்கலாம் அல்லது இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை கொண்டுவராலாம் என்ற யோசனைகளை கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் முன்வைத்திருந்தாரே?

பதில் – அவ்வாறன தீர்மானங்கள் இந்தப் பிரச்சினைக்கு நிரந்த தீர்வாக அமையாது. தற்காலிக தீர்வுகளினூடாக இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது.

கேள்வி அப்படியானால், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்ற அடிப்படையில், இந்தப் பிரச்சினைக்கு எவ்வாறான தீர்வை முன்வைக்கலாம் எனக் கருதுகின்றீர்கள்?

பதில் – கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கும் மாணவர்களை அதிகரிக்க வேண்டும். இதனூடாக அங்கிருந்து வெளியேறும் ஆசியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது இந்தப் பிரச்சினைக்கு தீர்வைக் காணக்கூடியதாக அமையும்.

கேள்வி – கல்வியல் கல்லூரிகளிலிருந்து வருடாந்தம் வெளியேறும் ஆசிரியர்களின் எண்ணிக்கை எந்தளவில் உள்ளது?

பதில் – சாதாரணமாக வருடமொன்றுக்கு சுமார் இரண்டாயிரத்து 500 பேரளவில் கல்வியல் கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்களாக வெளியேறுகின்றனர். ஆனால், அவர்கள் அனைவரும் தமிழ்மொழிமூலமானவர்கள் மட்டுமல்ல. ஏனைய மொழிமூலமானவர்களும் உள்ளடங்குகின்றனர்.

கேள்வி – மலையகத்திலிருந்து கல்வியல் கல்லூரிகளுக்கு தெரிவாகும் மாணவர்களின் எண்ணிக்கை போதுமானளவு உள்ளதா?

பதில் – போதுமானளவு மாணவர்கள் கல்வியல் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படுகின்றனர். இலங்கையில் மொத்தமாக 24 கல்வியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றிள் சில கல்வியல் கல்லூரிகள் இயங்காத நிலையில் உள்ளன. நிலையில், இயங்காத ஏனைய கல்வியல் கல்லூரிகளில் உள்ள வளங்களைப் பயன்படுத்தலாம்.

கேள்வி – ஆசிரியர் பிரச்சினை குறித்து, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் என்ற அடிப்படையில், கல்வி அமைச்சிடம் யோசனைகளை முன்வைத்துள்ளீர்களா?

பதில் – இந்த விடயத்தில் நாம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். நிரந்தர தீர்வைக் காண்பது அவசியமாகும். எனவே, உடனடியாக செயற்படவேண்டிய தேவை உள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435