மாகாண மட்டத்தில் ஆசிரியர் ஆட்சேர்ப்பை நெறிப்படுத்த அமைச்சரவை அங்கீகாரத்தை கல்வியமைச்சு கோரியுள்ளது.
ஆட்சேர்ப்பின் போது இடம்பெறும் மோசடிகளை குறைக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டு கற்பிக்கத் தகுதியற்ற பாடங்களை கற்பிக்கவும் அவர்களை ஈடுபடுத்த மாகாணசபை முயல்வதாக குற்றச்சாட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள கல்வியமைச்சு, இதனை தடுக்கும் முகமாக குறித்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த கல்வியமைச்சர், மொழியாசிரியர்களை பொருளாதாரம் கற்பிக்குமாறும் பணிக்கப்படுகின்றனர். ஆரம்ப பாட ஆசிரியர்களை சாதாரண தரத்தை கற்பிக்க நிர்ப்பந்திக்கின்றனர். இது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் மூன்றாம் திருத்தச்சட்ட பிரகாரமும் ஆசிரியர்களை நேரடியாக சேர்த்துக்கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனினும் தகுதியில்லாதவர்கள் கற்பிப்பதனால் கல்வி முறையில் பாதிப்பேற்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.