மாணவ உளவளத்துணை ஆசிரியர் நியமனம் விரைவில்

மாணவர் ஆலோசனைக்காக ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்றும் இணைத்துக்கொள்வதற்கான எழுத்து மூல பரீட்சை, நேர்முக பரீட்சைகள் தற்போதைக்கு நிறைவு செய்யப்பட்டுள்ளன என்றும் கல்வியமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர் ஆலோசனையை பாடசாலை மட்டத்தில் செயற்திறனுடன் முன்னெடுத்து செல்வதற்கான காலத்தின் தேவையை அறிந்து அதற்காக கல்வி கட்டமைப்பில் விசேட தகைமையுடன் கூடிய பட்டதாரிகளில் புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு தேவையான ஒழுங்கு விதிகளை செய்யுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கிய ஆலோசனையின் பிரகாரம், கடந்த வருடம் நவம்பர் 25 ஆம் திகதியன்று அதற்கான போட்டி பரீட்சை நடத்தப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சேவை யாப்பின் பிரகாரம் , ஆசிரியர் சேவையின் 3-1 (அ) வகுப்புக்காக மாணவர் ஆலோசனைக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களுக்கு அமைவாக குறித்த ஆசிரியர் இணைப்பு இடம்பெறவுள்ளது.

எனினும் மாகாண பாடசாலைகளுக்கான மாணவர் ஆலோசனை ஆசிரியர் நியமனத்திற்கு சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்கள் மாத்திரமே உடன்பட்டுள்ளன.

இதன்பிரகாரம் தேசிய பாடசாலைகளில் 232 வெற்றிடங்களும் (சிங்கள மொழி-184 மற்றும் தமிழ் மொழி-48) வட மேல் மாகாண பாடசாலைகளில்341 வெற்றிடங்களும் (சிங்கள மொழி- 274 மற்றும் தமிழ் மொழி-67) சப்ரகமுவ மாகாண பாடசாலைகளில் 235 வெற்றிடங்களும் (சிங்கள மொழி- 182 மற்றும் தமிழ் மொழி-53)உள்ளன. குறித்த வெற்றிடங்களுக்காக மாணவர் ஆலோசனை ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம் குறித்த நியமனத்திற்கான நேர்முக பரீட்சை 2019-05-31 முதல் 2019-06-10 ஆம் திகதி வரை கல்வி அமைச்சில் நடத்தப்பட்டது. எழுத்து மூல பரீட்சை மற்றும் செயற்பாட்டு பரீட்சையில் சித்தி பெற்ற விண்ணப்பதாரிகளில் எடுத்துக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் திறமைகள் உடையோர் குறித்த நியமனத்திற்காக இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435