மார்ச் 10இற்கு பிறகு நாடு திரும்பியவர்களின் விபரங்கள் சேகரிப்பு

இம்மாதம் 10ம் திகதிக்குப் பின்னர் இலங்கைக்கு வருகை தந்தவர்கள் குறித்த விபரங்களை முழுமையாக சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களை சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தும் வகையில் இவ்விபரங்கள் சேகரிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுய தனிமைப்படுத்தல் அறிவுறுத்தலை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான கடுமையான நடவடிக்கை எடுக்க

இந்த அறிவுரையை மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிமைப்படுத்தல் சட்டமூலத்திற்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் குறித்த தகவல்களை அவசர இலக்கம் 1933 இன் ஊடாக அறிவிக்க முடியும்.

ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் அத்தியவசிய சேவைகளை முன்னெடுக்க மட்டுமே அனுமதிப்பத்திரங்கள் விநியோகிக்கப்படுகின்றன. அவ்வாறு வழங்கப்படும் அனுமதிப்பத்திரங்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10ம்திகதி வரை செல்லுபடியாகும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்

உங்கள் கருத்துக்களை ஒன்று திரட்டுங்கள்

தமிழ் சொற்களை ரைபிங் செய்வதற்கான தன்னியக்க வசதி உள்ளதால் உங்கள் சொற்களை ஆங்கிலத்தில் ரைப் செய்து ஸ்பேஸ் பாரை அழுத்துவதனால்; தன்னியக்கி மூலம் தமிழ் சொற்களாக மாறும்.

உழைப்புப் பற்றிய கல்வி , அறிவு மற்றும் பரஸ்பர கலந்துரையாடலுக்கு ஆகிய நோக்கத்திற்கு மட்டுமே இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Wedabima.lk © 2016 | Contact - [email protected] - +94 777 073 435